Theme Check

ஒரு வழியாக வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!!

ஒரு வழியாக வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!!

ஒரு வழியாக வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!!
X

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்கு கள்ள ஓட்டாக பதிவானதாக புகார் எழுந்த நிலையில், தாமதமாக சென்று அவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்ததால் அண்ணாநகர் கிழக்கு வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. பி.முருகன் என்பவர் வாக்குப்பதிவு செய்ய வருகையில், வாக்குப்பதிவு மைய ஏஜெண்டுகள் தவறுதலாக இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் அவரது வாக்கை பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

இதனால், எல்.முருகன் பெயரில் பி.முருகன் என்பவர் வாக்கு பதிவு செய்துவிட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் அங்கு பெரிதாகவே, பி.முருகன் என்பவரிடமும் வாக்குப்பதிவு மைய ஏஜெண்டுகளிடமும் டி.பி.சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

L-Murugan

அதில், வாக்குப்பதிவு மைய ஏஜெண்ட் தவறுதலாக எல்.முருகனை டிக் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால், யார் மீதும் தவறில்லை என காவல்துறை தெரிவித்தது.

இந்நிலையில் எல்.முருகனின் வாக்கு கள்ள வாக்காக பதிவு செய்யப்பட்டது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் மீது பா.. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், மாலை தாமதமாக சென்று அண்ணா நகர் கிழக்கு - நியூ ஆவடி சாலையிலுள்ள சென்னை மிடில் ஸ்கூலில் அவருடைய வாக்கை எல்.முருகன் பதிவு செய்தார்.

newstm.in

Next Story
Share it