கோவாவில் மத்திய அமைச்சரின் மகள் நடத்தும் சட்டவிரோத மதுபான பார்? - அரசியலில் புயல்

கோவாவில் மத்திய அமைச்சரின் மகள் நடத்தும் சட்டவிரோத மதுபான பார்? - அரசியலில் புயல்

கோவாவில் மத்திய அமைச்சரின் மகள் நடத்தும் சட்டவிரோத மதுபான பார்? - அரசியலில் புயல்
X

கோவாவின் அசகாவோவில் செயல்பட்டு வரும் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் பார் இயங்கி வருகிறது. இது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த உணவகம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதாவது, இறந்தவரின் பெயரிலேயே அந்த உணவகத்திற்கான குடி உரிமை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. கோவா மாநில கலால் வரி விதிகளின்படி ஏற்கனவே உள்ள உணவகம் மட்டுமே மதுபானம் அல்லது பார் உரிமம் பெறமுடியும். ஆனால் புதிதாக தொடங்கப்பட்ட சில்லி சோல்ஸ் கஃபே இன்னும் உணவக உரிமம் பெறவில்லை. அதில் மதுக்கடை நடத்தப்படுகிறது.

smirthi rani daughter

அந்த உணவகத்தின் மதுபான உரிமம் ஆண்டனி டிகாமாவின் பெயரில் உள்ளது. மேலும் கடந்த மாதம் தான் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தோனி டிகாமா என்ற உரிமத்தில் பெயரிடப்பட்ட நபர் மே 2021ஆம் ஆண்டு காலமானார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ் இந்த மோசடியை அம்பலப்படுத்தினார்.

இந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் அமைச்சரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்த உணவகத்தை சுற்றி பவுன்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடக வெளிச்சம் இந்த விடுதியின் மீது படாமல் இருக்கவே இந்த கெடுபிடி உள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

smirthi rani daughter

ஆனால் இந்த குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மறுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இது காங்கிரஸ் தலைமையின் தூண்டுதலின் படி செய்யப்படுகிறது. எனது மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு தவறானது. அவரது குணத்தை படுகொலை செய்வது மட்டுமல்லாமல், என்னை அரசியல் ரீதியாக கேவலப்படுத்தும் செயல் ஆகும் என தெரிவித்தார். மேலும், தனது 18 வயது மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it