வரலாறு காணாத வெப்பம்.. 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு !!

வரலாறு காணாத வெப்பம்.. 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு !!

வரலாறு காணாத வெப்பம்.. 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு !!
X

போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் கடும் வெப்ப அலை காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத கடும் வெப்ப அலையை எதிர்கொண்டுள்ளன. இங்கிலாந்து, பிரான்ஸ்,போர்ச்சுக்கல், ஸ்பெயின் நாடுகளில் ஜூலை தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. திங்கட்கிழமை மட்டும் லண்டனில் 43 செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
heat

இந்த நிலையில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

போர்ச்சுக்கலில் கடந்த வாரத்தில் மட்டும் 659 பேர் வெப்ப அலைக்கு பலியாகினர். போர்ச்சுக்கல்லின் அண்டை நாடான ஸ்பெயினில் 368 பேர் பலியாகினர். ஜூலை 10ஆம் தேதி முதல் கடும் வெப்பம் நிலவுவதால் இரு நாடுகளிலும் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு 38 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகிறது.

heat

மேலும், ஜூலை 14 தேதி போர்ச்சுகலிலுள்ள பின்ஹோவில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது என போர்ச்சுக்கலின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

spain heat

இது நாட்டின் முந்தைய அதிகபட்ச வெப்ப நிலையான 1995 -ஆம் ஆண்டு அமரிலிஜாவில் ஏற்பட்ட 46. 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை முறியடித்திருக்கிறது, என்று ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it