Theme Check

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 268 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 489 பேரூராட்சிகளில் 74.68 சதவீதம், 138 நகராட்சிகளில் 68.22 சதவீதம், 21 மாநகராட்சிகளில் 52.22 சதவீதம் என மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, 268 வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டன.

count3

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாககண்காணிக்கப்பட்டது. வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் விதமாக பெரிய திரைகளிலும் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார், வளாகப் பகுதி, வளாகத்துக்கு வெளியே மற்றும் நுழைவு வாயில் பகுதியில் உள்ளூர் போலீஸார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியை முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it