பயன்பாட்டுக்கு வருகிறது மூக்கு வழியில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து !!

பயன்பாட்டுக்கு வருகிறது மூக்கு வழியில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து !!

பயன்பாட்டுக்கு வருகிறது மூக்கு வழியில் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து !!
X

மூக்கு வழியாக செலுத்தப்படும் ‘ஸ்ப்ரே’ வடிவ தடுப்பூசி விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கும் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் ஊசியாக இல்லாமல் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கும் பணியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மூக்கு வழியாக செலுத்தப்படும் ‘ஸ்ப்ரே’ வடிவ தடுப்பூசியை கண்டுபிடித்து ரஷ்யா சாதித்துள்ளது. இதற்கான சோதனைகள் முடிவடைந்து பயன்பாட்டு அனுமதிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

nasal-corona-vaccine

இது குறித்து ‘‌ஸ்புட்னிக் வி’ எனும் இந்த தடுப்பு மருந்து தயாரிக்கும் கமலேயா மையத் தின் இயக்குநர், அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் கூறுகையில், நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசி மூன்று முதல் நான்கு மாதங்களில் கிடைக்கும், என்று சென்ற ஜனவரி மாதம் கூறியிருந்தார். இதன்மூலம், நாசி வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் வழங்க ரஷ்யா திட்டமிட்டிருந்தது. எனினும் தற்போது போர் காரணமாக அது சாத்தியமில்லை என கருதப்படுகிறது. எனினும் தனது நட்பு நாடுகளுக்கு மூக்கு வழியாக செலுத்தப்படும் ‘ஸ்ப்ரே’ வடிவ தடுப்பூசி ரஷ்யா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it