Theme Check

உஷார்! வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்!!

உஷார்! வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்!!

உஷார்! வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்!!
X

கொரோனா பரவலுக்கு பிறகு உலகில் எந்த நோய் பரவினாலும், நாமும் உஷாராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலகையே ஆட்டுவிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அந்த வகையில் தற்போது பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பரவத் தொடங்கியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

monkey pox

பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் அமர்ந்து பயணித்தவர்கள் குறித்த தகவலும் திரட்டப்படுகிறது. இந்நிலையில், லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை நோய் எளிதில் பரவக்கூடியதல்ல. நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழங்குவதன் மூலமே இந்த நோய் பரவுகிறது. நோய் தொற்று ஏற்பட்ட சில வாரங்களிலேயே மக்கள் குணமடைந்து விடுகிறார்கள்.

monkey pox

காய்சல், தலைவலி, தசை வலி, முதுகுவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். குரங்கு அம்மை நோயானது பிளவு ஏற்பட்ட தோல், சுவாசப்பாதை, கண், மூக்கு, வாய் போன்றவற்றின் மூலம் பரவுகிறது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it