உஷார்! சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருக்கிறது!!
உஷார்! சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருக்கிறது!!

சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி இருக்கிறது, அதை எப்படி கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.
சிலிண்டரின் மேற்புறத்தில் எடை குறித்த தகவல் இருக்கும். அதில் சிலிண்டரின் காலாவதி தேதி இருப்பதையும் பார்க்கலாம். அது வழக்கமான தேதி போல இருக்காது. கோட் வேர்டில் இருக்கும்.
A-23, B-23, C-24 அல்லது D-25 என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுதான் சிலிண்டரின் காலாவதி தேதி. ABCD என்பது மாதங்களைக் குறிக்கும். A என்பது ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதத்தைக் குறிக்கிறது. B என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதத்தைக் குறிக்கிறது.

C என்பது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தைக் குறிக்கிறது. கடைசியாக D என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதத்தைக் குறிக்கும். ABCDக்கு பின்னால் வரும் எண்கள் வருடத்தைக் குறிக்கின்றன.
உதாரணமாக, கேஸ் சிலிண்டரின் காலாவதி தேதி D-22 என்றால், அந்த சிலிண்டர் 2022ஆம் ஆண்டின் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காலாவதியாகிவிடும் என்று அர்த்தம்.
இந்த முறை மூலம் உங்களுடைய கேஸ் சிலிண்டரின் காலாவதி தேதியை அனைவரும் கண்டறியலாம்.
newstm.in

