Theme Check

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி.. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை !!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி.. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை !!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி.. ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை !!
X

தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர். ஏற்கனவே மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை அசோக்நகர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு நேரில் ஆய்வு செய்தார். பள்ளியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் பாதிப்பின்றி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

radhakiru

பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுகிறது. மணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்கள் இலக்கு உள்ள நிலையில் 77% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2.5 லட்சம் இலக்கு உள்ள நிலையில் 1.80 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியக்கூடாது. ஆனால் மற்ற குழந்தைகளுக்கு விழிப்புணர்வு உள்ளது. முகக்கவசம் அணிய சவாலாக இருக்கும் போது தனி இடத்தில் வந்து தளர்வு படுத்திக்கொள்ளலாம், என அவர் தெரிவித்தார்

radhakiru

தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 2 வாரம் கவனக்குறைவாக இருக்க கூடாது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்து வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 4% பேர் மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளனர். அடுத்த 2 வாரம் இதே அளவு ஒத்துழைப்புடன் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். 30 விழுக்காட்டிலிருந்து 10 - 12% வரை நோய் தொற்று பரவல் குறைந்துள்ளது என அவர் கூறினார்

newstm.in

Next Story
Share it