தடுப்பூசி கட்டாயம் இல்லை.. மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு..!
தடுப்பூசி கட்டாயம் இல்லை.. மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதையடுத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. மேலும், அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள், கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 23 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
மேலும் முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், கூட்ட நெரிசல் தவிர்த்தல் ஆகியவற்றை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

