Theme Check

வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் பலி !

வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் பலி !

வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் பலி !
X

மலைப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த வேன் திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் மலைப்பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. கில்லா சைஃபுல்லா பகுதிக்கு அருகே மலை உச்சியில் ஜோப் தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

gfdg

இதனால் சாலையோர தடுப்பில் மோதி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதாவது சுமார் நூற்றுக்கணக்கான அடி பள்ளத்தில் பயணிகளுடன் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த தகவலை அறிந்து மீட்பு குழுவினர், உள்ளூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், வேனில் பயணித்த 22 பயணிகளும் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக துணை ஆமையர் ஹாபிஸ் முகமது காசிம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 22 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதில் பலரது உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. எனினும் அனைத்து பயணிகளும் உயிரிழந்துவிட்டதால் காரணத்தை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it