Theme Check

வீரபாண்டிய கட்டபொம்மன் விழா.. வீரத்துடன் நடைபெற்ற விழாவில் மக்கள் உற்சாகம் !!

வீரபாண்டிய கட்டபொம்மன் விழா.. வீரத்துடன் நடைபெற்ற விழாவில் மக்கள் உற்சாகம் !!

வீரபாண்டிய கட்டபொம்மன் விழா.. வீரத்துடன் நடைபெற்ற விழாவில் மக்கள் உற்சாகம் !!
X

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முதல் குரல் எழுப்பிய பெருமைக்கு சொந்தகாரர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரது வீரம் பல ஆண்டுகளாக நிலைத்துநின்று வரலாறாக மாறியுள்ளது.

இந்த நிலையில், ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டி கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் வீரசக்கதேவி கோவில் 66-வது திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வீரசக்கதேவிக்கு 16 வகையான சிறப்பு பூஜைகள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


veerapandian
இந்த திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு ஜோதியை மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியினர் பாஞ்சாலங்குறிச்சி கொண்டுவந்து ஆலயத்தில் வைத்து வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து வம்சாவளியினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் மேலும் கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மனின் வரலாறு குறித்த ஓவியக் கண்காட்சியும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
veerapandian
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறவில்லை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டபொம்மன் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற்றதால் மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்த திருவிழா நடைபெற உள்ளது.


newstm.in

Next Story
Share it