#BIG NEWS:- ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலை உயர்வு..!!
#BIG NEWS:- ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலை உயர்வு..!!

வாகனங்கள் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் செலவினம் அதிகரிப்பால் தனது வாகனங்களின் விலையை 4 சதவீதம் உயர்த்த உள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘மூலப் பொருட்கள் உள்ளிட்ட உள்ளீட்டு செலவுகளில் தொடர்ச்சியான அதிகரிப்பின் பின்னணியில் இந்த விலை உயர்வு அவசியமாகிறது.
செலவின அதிகரிப்பால் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. மூலப்பொருட்கள், உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
சொகுசு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது வாகனங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 3.5 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. மூலப்பொருட்கள், உதிரிபாகங்களின் விலை உயர்வு, தளவாடச் செலவுகளை சரி செய்யும் வகையில் இந்த விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

