Theme Check

மூத்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் காலமானார்..!

மூத்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் காலமானார்..!

மூத்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் காலமானார்..!
X

சிங்கப்பூரின் உயரிய கலை, இலக்கிய விருதான கலாசார பதக்கம் வென்ற மூத்த நடனக் கலைஞர் சாந்தா பாஸ்கர் காலமானார். அவருக்கு வயது 82.

பாஸ்கர் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தின் 70வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட தொடக்க நிகழ்வான 'சங்கீத சப்ததி' சிங்கப்பூரின் வாட்டர்லூ சென்டரில் இரண்டாவது நாளாக கடந்த சனிக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சி மேற்பார்வையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த சாந்தா பாஸ்கர், நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் திடீரென மூச்சு விட சிரமப்பட்டார்.

இதையடுத்து, டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், இரவு 8.15 மணிக்கு உயிரிழந்தார்.

Next Story
Share it