Theme Check

வீடியோ காலில் பேசி பணம் பறிக்கும் பெண்கள்.. ஆண்களுக்கு காவல்துறை எச்சரிக்கை ! !!

வீடியோ காலில் பேசி பணம் பறிக்கும் பெண்கள்.. ஆண்களுக்கு காவல்துறை எச்சரிக்கை ! !!

வீடியோ காலில் பேசி பணம் பறிக்கும் பெண்கள்.. ஆண்களுக்கு காவல்துறை எச்சரிக்கை ! !!
X

நாடு முழுவதும் புதிய ட்ரெண்டாக ஆண்களைக் குறிவைத்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண், பெண்கள் இணைந்த கும்பலே இந்த மோசடியில் ஈடுபடுகிறது.

அந்த கும்பலில் உள்ள பெண், முதலில் சம்பந்தப்பட்ட நபருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு ஆபாச செய்தியை அனுப்பி வைக்கின்றார். அந்த ஆண் அதற்கு பதில் அளித்தால் வாட்ஸ் அப்பில் சாட்டிங் தொடர்கிறது. அதன் பிறகு வீடியோ காலில் அழைக்கும் அப்பெண் ஆபாசமாக பேசுகிறார். பின்னர் வீடியோ காலில் அப்பெண் ஆபாசமாக தோன்றுகிறார். அதேபோல் அந்த ஆணின் ஆடைகளை கழற்ற தொடங்கும் பெண் நிர்வாணமாக நிற்கவைத்து ஆபாசமாக பேசுகின்றனர்.

whatsapp

ஆணும் உடைகளை களட்டினால் இருவரும் நிர்வாணமாக நின்று வீடியோகாலில் பேசுவதாக கூறப்படுகிறது. அந்த நிர்வாண பேச்சு முடிந்தபிறகு தான் ஆபத்து தொடங்கிறது. அதாவது, அந்த ஆண் நிர்வாணமாக நின்று பேசியதை மட்டும் வீடியோவாக பதிவுசெய்து பாதிக்கப்பட்டவரை மிரட்டி அச்சுறுத்தி பணம் பறிக்கின்றனர்.

எனவே அடுத்தடுத்து தெரியாத நம்பர் மூலம் வரும் அழைப்புகளை யாரும் ஏற்க வேண்டாம் என்றும் தெரியாதவர்களுடன் வீடியோ காலில் ஈடுபட வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒருவேளை அப்படி நடந்தால் உடனடியாக புகார் கொடுக்க தயங்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

whatsapp

பீகார் மாநிலத்தில் காவல் துறையின் பொருளாதார மற்றும் சைபர் குற்றப்பிரிவு கடந்த 4 மாதங்களில் 15 பாலியல் வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக அந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் போலி ஆவணங்கள் மூலமாக பெறப்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த கும்பல் ஆண்களைக் குறிவைத்து இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள்.


newstm.in

Tags:
Next Story
Share it