ரஷ்ய போர் வாகனங்களை வழிமறித்து போராடும் உக்ரைன் மக்கள்- வீடியோ !!

ரஷ்ய போர் வாகனங்களை வழிமறித்து போராடும் உக்ரைன் மக்கள்- வீடியோ !!

ரஷ்ய போர் வாகனங்களை வழிமறித்து போராடும் உக்ரைன் மக்கள்- வீடியோ !!
X

உக்ரைன் மீது 6ஆவது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அமைதிக்கான பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ரஷ்யா போரை தொடரும்; அதிலிருந்து பின்வாங்க போவதில்லை என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷோய்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா 120 மணி நேரத்திற்கு மேலாக இடைவெளி இன்றி நடத்தி வரும் தாக்குதலால் கடுமையான உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 350-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய தாக்குதலால் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

russia

தொடக்கத்தில் வான்வெளி வழியாக உக்ரைனுக்குள் ரஷ்ய வீரர்கள் புகுந்து தாக்குதலை தொடங்கினர். தற்போது தரைவழியாக சாலையில் உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் செல்கின்றன. இந்த நிலையில் உக்ரைனுக்குள் நுழைந்த ராணுவ பீரங்கி, டாங்கிகளை வழியில் ரஷ்ய மக்கள் வழிமறித்து போராட்டம் நடத்துகின்றனர். மக்கள் போராடுவதால் ரஷ்ய வீரர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.

தாக்குதல் நடத்த எங்கள் நகருக்குள் செல்லக்கூடாது என்றும் கூறி ரஷ்ய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனினும் டாங்கிகளுக்குள் இருக்கும் ரஷ்ய வீரர்கள் எவரும் வெளியே வரவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது பரவி வருகிறது.


newstm.in

Tags:
Next Story
Share it