பிணவறையில் உயிருடன் எழுந்த முதியவர்- பகீர் கிளப்பும் வீடியோ

பிணவறையில் உயிருடன் எழுந்த முதியவர்- பகீர் கிளப்பும் வீடியோ

பிணவறையில் உயிருடன் எழுந்த முதியவர்- பகீர் கிளப்பும் வீடியோ
X

பிணவறைக்கு கொண்டுச்சென்ற முதியவர் ஒருவர் திடீரென உயிருடன் எழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தொற்று தடுப்பு நடவடிக்கை என்கிற பெயரில் பல மனித உரிமை மீறல்கள் நடப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. அதாவது தொற்று பாதித்த வீட்டில் உள்ள வளர்ப்பு பிரானிகளை அரசே கொள்கிறது, வீடுகளை வலுக்கட்டாயமாக மருத்துவமனைகளா மாற்றப்படுகிறது போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷாங்காய் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் எந்த சோதனையும் செய்யாமல் அவரது உடலில் துணியை சுற்றி பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

china hospitel corona

அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் முதியவரின் உடலில் சுற்றியிருந்த துணியை விலக்க முயன்றபோது, முதியவரின் உடல் அசைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், முதியவரை பரிசோதித்ததில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதியவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தாமல் சுகாதார பணியாளர்கள் அவரது உடலை தூக்கிவந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுகாதார அதிகாரிகள் 4 பேரை ஷாங்காய் நிர்வாகம் பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே இந்த சம்பம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.


newstm.in

Tags:
Next Story
Share it