பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த காரியம்- வீடியோ !!
பறக்கும் விமானத்தில் இளம்பெண் செய்த காரியம்- வீடியோ !!

விமான பயணம் என்றாலே எல்லாருக்கும் ஒருவித சந்தோஷம் இருக்கத்தான் செய்யும். அதிலும் விண்டோ சைட் ஷீட் என்றால் சொல்லிக்கொடுக்கவா வேண்டும். அந்த வகையில் விண்டோ சைட் ஷீட்டுக்காக பறக்கும் விமானத்தில் இளம்பெண் ஒருவரின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ப்ராண்டன் (Brandan) என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு, நான் பார்த்ததிலேயே மோசமான குற்றம் இது. ஒரு பெண் ஏழு மணி நேர விமான பயணம் முழுவதும் மற்ற பயணிகளின் மீது தாண்டி தாண்டி அவர்களை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தார், என பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அந்த வீடியோவில் ஒரு பெண் விமானத்தில் ஜன்னல் சீட்டுக்கு போவதற்காக முன்னாலிருந்த இரண்டு பயணிகளை தாண்டி போக வேண்டியிருந்தது. அதற்காக அவர் முதல் சீட்டில் கால் வைத்து ஏறி இரண்டு பயணிகளை தாண்டி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். ஒவ்வொரு முறை அவர் ஏதாவது தேவைக்காக எழுந்துக் கொள்ளும் போதும் இதே போல் செய்ததாக கூறப்படுகிறது. அதில் அவர் தாண்டிய முதல் பயணி ஒரு குழந்தையோடு அமர்ந்திருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால் அந்தப் பெண் விமர்சனத்துக்குள்ளானார்.
நம்மூர் ஏசி பேருந்துகளில் செல்வது போல்தான் இருக்கும். இந்நிலையில் இந்தப் பெண் செய்த செயல் பலரது எதிர்விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
The most criminal activity I’ve ever seen on an airplane. This woman was hopping over other passengers the whole 7 hour flight. @PassengerShame pic.twitter.com/drET3BGBWv
— brandon🚀 (@In_jedi) June 15, 2022
newstm.in

