திருமணமான மறுநாளே மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!!
திருமணமான மறுநாளே மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!!

திருப்பதியில் செருப்பு அணிந்து சென்றது சர்ச்சையானதை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார்.
திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதியரான விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி நேற்று திருப்பதியில் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நண்பகல் 12 மணிக்கு நாள்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தம்பதியர் விக்கேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அவர்களை புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞர்கள் ஆகியோர் மாட வீதியில் செருப்பு காலுடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி இருவரையும் விமர்சித்து வந்த நிலையில், தங்களது செயலுக்கு விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், இருவரும் திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சென்னையில் திருமணம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோவிலில் செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை என்று கூறியுள்ள விக்னேஷ் சிவன், தவறுக்காக உண்மையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இருவரும் தொடர்ந்து திருப்பதி கோவிலுக்கு வருகிறோம் என்றும், கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
newstm.in

