Theme Check

கிராம பதவி வெறி.. சொந்த தம்பியை வீதியில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்த அண்ணன்

கிராம பதவி வெறி.. சொந்த தம்பியை வீதியில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்த அண்ணன்

கிராம பதவி வெறி.. சொந்த தம்பியை வீதியில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்த அண்ணன்
X

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சிவனாகரம பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(50). விவசாயியான இவர் அந்த ஊரின் நாட்டாமையாக இருந்து வந்துள்ளார்.

இதே ஊரில் இவரது சமூத்த சகோதரரான பாண்டியன் (55) என்பவரும் வசித்து வந்துள்ளார். சகோதரர்கள் என்றாலும், ஊர் நாட்டாமை பதவி தொடர்பாக செந்தில்குமாருக்கும் அவரது அண்ணன் பாண்டியனுக்கும் இடையே பிரச்சினை இருந்து உள்ளது. இதே போன்று கோவில் கட்டுவது தொடர்பாகவும் ஒரு பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் இரவில் செந்தில்குமாரிடம் பாண்டியனும் அவரது மகன் சந்தோஷ்குமார்(26) வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்கு வீதியில் வைத்தே தகராறு ஏற்பட்டுள்ளது.

attackmurder

அதாவது, இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த பண்டியன் மற்றும் சந்தோஷ்குமார் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் குமாரின் கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் குத்தி உள்ளனர்.

இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
murder

இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலையூர் போலீசார் உயிரிழந்த செந்தில்குமார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பாண்டின் மகன் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


newstm.in

Next Story
Share it