பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கிராம மக்கள்!!
பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கிராம மக்கள்!!

கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டத்தில் கிராமவாசிகள் ஒன்பது பேர் பழங்குடி பெண்ணை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெத்தலகண்டி தாலுக்காவைச் சேர்ந்த குரிபல்லா என்ற கிராமத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பழங்குடியின பெண்ணை நிர்வாணப்படுத்தி கிராமத்தை சேர்ந்த 9 பேர் தாக்கினர்.
கிராமத்தைச் சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுனா, குஸ்மா, லோகய்யா, அணில், லலிதா, சென்னகேசவா ஆகியோர் மீது 35 பழங்குடி பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர்கள் அந்த பெண்ணை தாக்கியும், அவரது உடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியும் அதைப் படம் பிடித்தும் துன்புறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பழங்குடி பெண்ணுக்கு அரசு வழங்கிய நிலத்தை இவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், இதை அந்த பெண் அரசு அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருவாய் துறை அலுவலர்கள் சென்று நிலத்தை அளக்க முயன்றனர்.

அரசு அதிகாரிகளை செயல்பட விடாமல் ஒன்பது பேர் தடுத்ததாகவும் அந்த அதிகாரிகளை வெளியேற்றிய பின், பழங்குடி பெண் மீது இந்த கொடூர தாக்குதலை இவர்கள் அரங்கேற்றியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மற்றும் மூத்த சகோதரியும் தாக்கப்பட்டார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

