Theme Check

சிறுத்தை நடமாட்டத்தால் பீதியில் கிராம மக்கள் !!

சிறுத்தை நடமாட்டத்தால் பீதியில் கிராம மக்கள் !!

சிறுத்தை நடமாட்டத்தால் பீதியில் கிராம மக்கள் !!
X

கோவை அருகே சுற்றித்திரியும் சிறுத்தையால் கிராம மக்கள் அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் அணையை ஒட்டிய புளியங்கண்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ராசு என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, வளர்ப்பு நாயை வேட்டையாடியுள்ளது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு விரைந்த வனத்துறையினர், கால் தடங்களைக் கொண்டு சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர். இதனையடுத்து சிறுத்தையை விரைவாக பிடிக்கவேண்டும், அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுச்சென்று அதனை விடவேண்டும் என வலியுறுத்தினர். கிராம மக்களை அச்சுறுத்தும் சிறுத்தையால் அசம்பாவிதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

fdg

இந்த நிலையில், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அந்த கிராமத்தின் 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். ஆனால் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டத்தில் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அலட்சியம் காட்டாமல் வனத்துறையினர் சிறுத்தையை விரைவாக பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.


newstm.in

Next Story
Share it