விதிகளை மீறி குப்பை.. முதல்வர் வீட்டுக்கு ரூ.10,000 அபராதம்..!
விதிகளை மீறி குப்பை.. முதல்வர் வீட்டுக்கு ரூ.10,000 அபராதம்..!

விதிகள் மீறி குப்பை கொட்டப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, பஞ்சாப் முதல்வர் வீட்டுக்கு அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
சமீபத்தில், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் சிங் மான். இவருடைய வீடு, பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ளது. இந்த வீட்டில், அனுமதியின்றி குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்தன.
)
இதையடுத்து அங்கு வந்து ஆய்வு செய்த சண்டிகர் நகரின் முனிசிபாலிட்டி அதிகாரிகள், முதல்வர் வீட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து விட்டுச் சென்றுள்ளனர்.
“முதல்வர், மாநிலத்திற்கு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், அவர் வீட்டில் இப்படிப்பட்ட ஒழுங்கற்ற செயல்கள் நடைபெறுகிறது” என உள்ளூர் பாஜக கவுன்சிலர் மகேஷ் இந்தர் சிங் சித்து கூறினார்.
Next Story

