வைரலாகும் வீடியோ! திருமண விழாவிற்கு அழையா விருந்தாளியாக வந்த கடல் பேரலை..!!

வைரலாகும் வீடியோ! திருமண விழாவிற்கு அழையா விருந்தாளியாக வந்த கடல் பேரலை..!!

வைரலாகும் வீடியோ! திருமண விழாவிற்கு அழையா விருந்தாளியாக வந்த கடல் பேரலை..!!
X

அமெரிக்காவை சேர்ந்த டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற ஜோடி கடற்கரையில் தங்கள் திருமண வரவேற்பை கொண்டாட விரும்பியுள்ளனர். அதன்படி கடந்த சனிக்கிழமை அங்கிருக்கும் ஹவாய் தீவில் அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து விருந்தினர்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தனர்.

Hawaii

அங்கு வந்த விருந்தினர்கள், கடற்கரை ஓரத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியை அனுபவித்தவாறே அலைகளை ரசித்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் மெக்சிகோவின் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டிருந்த டார்பி புயல் எதிரொலியாக ஹவாயின் கைலுவா - கோனா பகுதியில் உள்ள கடற்கரையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்குள் திடீரென ஆக்ரோஷமாக கடல் அலைகள் புகுந்தன. அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தும் கடல் அலையால் கவிழ்ந்தது. மேலும் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி அனைத்தும் பாழாய் போனது.


ஆனால் நல்ல காலமாக அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தையும் தலைகீழாய் புரட்டிப்போட்ட கடங ஆலை, மனிதர்கள் யாருக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை என்ற நிம்மதி மட்டுமே எஞ்சியது. ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லப்படும் திருமணத்தை செய்து கொள்ளும் சில நிமிடங்களுக்கு முன்பே அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு கடலலையால் ஏற்பட்ட அதிர்ச்சி சற்று நேரத்தில் வடிந்துவிட்டது.

Tags:
Next Story
Share it