Theme Check

பீட்சா டெலிவரி பெண்ணை சரமாரியாக தாக்கிய பெண்கள்- வைரல் வீடியோ !!

பீட்சா டெலிவரி பெண்ணை சரமாரியாக தாக்கிய பெண்கள்- வைரல் வீடியோ !!

பீட்சா டெலிவரி பெண்ணை சரமாரியாக தாக்கிய பெண்கள்- வைரல் வீடியோ !!
X

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் 4 பெண்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அடிப்பதற்கான காரணங்களிலேயே இது வித்தியாசமானது. காமெடி காட்சிகளில் முறைத்து பார்த்து விளையாட்டாக அடிப்பதை பார்த்திருப்போம். அப்படி நிஜமான ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் இளம்பெண் பீட்சா டெலிவரி செய்ய சென்றுள்ளார். அப்போது சாலையில் நின்ற பெண்களை அவர் முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை இவர்கள் தான் ஆர்டர் செய்திருப்பார்களோ என்ற கவனத்தில் அவர் அப்படியாக பார்த்திருக்கலாம்.

girl attack

ஆனால், தங்களை முறைத்துப் பார்த்ததாக கூறி அவரை 4 பெண்கள் சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். காலால் மிதித்தும், கட்டையை எடுத்தும் சரமாரியாக தாக்கினர் இவர்களின் அடியை தாங்க முடியாமல் பீட்சா டெலிவரி பெண் ஊழியர் அருகில் இருந்த வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணிடம் விசாரணை செய்து அவரை அடித்த 4 பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


newstm.in

Tags:
Next Story
Share it