விபத்தில் சிக்கிய விஷால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விபத்தில் சிக்கிய விஷால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விபத்தில் சிக்கிய விஷால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
X

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், நடிகர் விஷாலின் முதல் பான் இந்தியா படமாக ‘லத்தி’ உருவாகி வருகிறது. இதில், விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் விஷாலின் நண்பர்களான நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது. பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஷால்.

இந்நிலையில், தற்போது ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது நடிகர் விஷாலுக்கு காலில் அடி விழ, துடிதுடித்துக் கீழே விழுந்தார்.

உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால், ‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

‘லத்தி’ படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது முறையாக விஷால் விபத்துக்குள்ளாகி இருப்பது அவருடைய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it