Theme Check

இனி வாட்ஸ் அப்-இல் வாக்களிக்கலாம்!!

இனி வாட்ஸ் அப்-இல் வாக்களிக்கலாம்!!

இனி வாட்ஸ் அப்-இல் வாக்களிக்கலாம்!!
X

வாட்ஸ் அப் நிறுவனம் குழுவிற்குள் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை விரைவில் வெளியிட இருக்கிறது.

மெசேஜ் மட்டுமே அனுப்பும் வகையில் அறிமுகமான வாட்ஸ் அப் இன்று பல மாற்றங்களை கொண்டு உலகம் முழுவதும் ஏராளமான பயனாளர்கள் பயன்படுத்தும் செயலியாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்த அப்டேட் மிகவும் சுவராஸ்யம் கொண்டதாக உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் குழுவிற்குள் போலிங் எனும் வாக்கெடுப்பை அனுமதிக்கும் புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது.

இதை வாட்ஸ் அப் குழுவில் மட்டுமே பயன்படுத்த முடியும். பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான தலைப்புகளில் குழுவிற்குள் கருத்துக்கணிப்புகளை உருவாக்கலாம். இது முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்குக் கிடைக்கும்.

whatsapp

அதற்குபிறகு ஆண்ட்ராய்ட் மற்றும் டெஸ்க்டாப் வெர்சனுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்கலாம், மற்றவர்கள் அதற்கு பதிலுக்கு வாக்களிக்கலாம். வாட்ஸ்அப் குழுக்களில் மட்டுமே கருத்துக் கணிப்புகள் கிடைக்கும். கேள்விகளும், பதில்களும் முழுவதுமாக என்கிரிப்டட் செய்யப்பட்டது.

வாட்ஸ் அப் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வாக்கெடுப்பு மற்றும் முடிவுகளை பார்க்க முடியும். மேலும் இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்கில் இருப்பது போல மெசேஜ் ரியாக்ஷன் விரைவில் வாட்ஸ் அப்பில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it