நிறைவு பெற்றது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு!!
நிறைவு பெற்றது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு!!

தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
அரசியல் தலைவர், திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும் வாக்களித்தனர்.
நடிகர் விஜய் காலையிலேயே வந்து நீலாங்கரையிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்துசென்றார். அதேபோல, சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களும் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர்.

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவருடைய மனைவி கிருத்திகாவுடன் சென்று எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் வாக்களித்தார்.
ஐந்து மணிக்கு முன்னதாக வாக்குச் சாவடிக்கு வந்தவர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பல பகுதிகளில் வாக்குப் பதிவு தொடர்ந்துகொண்டிருக்கிறது. டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவை நடத்தினர்.
newstm.in

