Theme Check

WARNING: இந்த Apps உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லையெனில் பணம் பறிபோகும் !

WARNING: இந்த Apps உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லையெனில் பணம் பறிபோகும் !

WARNING: இந்த Apps உடனே டெலிட் பண்ணுங்க.. இல்லையெனில் பணம் பறிபோகும் !
X

கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரக்கணக்கான செயலிகள் இருந்தாலும், அவற்றை கவனமாக பயன்படுத்துவது அவசியம். தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, நீங்கள் பதிவிறக்கம் செய்யும் செயலிகளின் பிரைவசி பாலிசியை கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் பலரும் கவனிப்பது கூட கிடையாது, பின்னர் எங்கிருந்து படிக்கிறது. இப்படி அலட்சியமாக விடுவது நமக்கே ஆப்பாக முடியும். லேட்டஸ்டாக, வாடிக்கையாளர்கள் பதிவு செய்த புகார்களின் அடிப்படையில் 3 செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

அந்த 3 செயலிகளும் பணத்தை திருடும் புகாரில் சிக்கியுள்ளன. அதாவது, ஜோக்கர் பக் என்ற மால்வேரை உங்கள் ஸ்மார்ட்போனுக்குள் அந்த செயலிகள் அனுமதிக்கிறதாம். ஜோக்கர் பக் மால்வேர் என்பது வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த தகவல்களை திருடக்கூடியது. இந்த புகாரில் சிக்கிய செயலிகள் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

asd

பிளட் பிரஷர் ஆப், ஸ்டைல் மெசேஜ் மற்றும் கேமரா பிடிஎப் ஸ்கேனர் (style message app, Blood pressure App, Camera PDF Scanner App ) ஆகிய செயலிகள் இந்த புகாரில் சிக்கி, கூகுள் பிளே ஸ்டோர் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒருமுறை இந்த செயலியை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால்போதும், ஜோக்கர் மால்வேர் உடனடியாக ஆக்டிவேட் ஆகிவிடும். அந்த நேரத்தில் மால்வேர் ஆக்டிவேட்டாகி சில கவர்ச்சிகரமான கேம்களை காட்டுமாம். அதனை கிளிக் செய்தால் அல்லது சப்ஸ்கிரிப்சன் செய்தால் பணத்தை திருடும் செயல்பாடுகளை தொடங்கிவிடுமாம். தற்போது கூகுள் மூன்று செயலிகளை கண்டுபிடித்து தடுத்துவிட்டது.

ஆனால் இதுபோன்று மேலும் பல செயலிகள் உலா வருவதால் மக்கள் கவனமுடன் செயலிகளை பதிவிறக்கம் செய்வது அவசியம்.

newstm.in

Next Story
Share it