எச்சரிக்கை! குரங்கம்மை குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்!!
எச்சரிக்கை! குரங்கம்மை குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்!!

குரங்கம்மை குழந்தைகளுக்கு பரவும் பட்சத்தில் அது அவர்களின் உயிருக்கே கூட ஆபத்தாக மாறிவிடலாம் என எம்ய்ஸ் கல்வி நிறுவன பேராசிரியர் பியூஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவியுள்ளது. இதுவரை 6,000க்கும் மேற்பட்டோர் மங்கிபாக்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
இந்நிலையில், இந்தியாவில் முதல் குரங்கம்மை தொற்று கேரளா மாநிலத்தில் பதிவாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு உரிய மருத்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கேரளா சுகாதரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரின் வீட்டார், உறவினர் என நேரடி தொடர்பில் இருந்த நபர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மத்திய சுகாதாரத்துறையும் தனது நிபுணர் குழுவை கண்காணிப்புக்காக அனுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த தொற்று நோய் தொடக்கத்தில் காய்ச்சல் ஏற்பட்டு, சுமார் ஐந்தாவது நாளில் உடலில் கட்டிகள், ரேஷஷ்கள் ஏற்படும் என்று எம்ய்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் பியூஷ் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கண்களில் இந்த ரேஷஷ் ஏற்பட்டால் அது பார்வையை பறித்து விடும் அபாயம் கூட ஏற்படலாம். இந்த குரங்கம்மை தொற்று விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு நெருங்கிய தொடர்பு மூலமாக பரவும். விலங்களுடன் முகத்தோடு முகத் தொடர்பு நீண்ட நேரம் இருந்தால் இந்த தொற்று பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம்.
இந்த தொற்று கோவிட் போல அதிக அளவில் பரவாது என்பதால் கவலைப்படத் தேவையில்லை. அதே வேளை, குழந்தைகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாகக் கூட அமைந்து விடும்' என எச்சரித்துள்ளார்.
newstm.in

