Theme Check

இந்தியாவுக்கு எச்சரிக்கை.. அதிவேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த புதிய ஒமைக்ரான் பரவியது !!

இந்தியாவுக்கு எச்சரிக்கை.. அதிவேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த புதிய ஒமைக்ரான் பரவியது !!

இந்தியாவுக்கு எச்சரிக்கை.. அதிவேகமாக பரவும் உருமாற்றம் அடைந்த புதிய ஒமைக்ரான் பரவியது !!
X

ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியாவில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த மாறுபாடு ஒமைக்ரான் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கருதி வரும் நிலையில், புதிய உருமாற்றம் அடைந்த வைரஸ் அந்த எண்ணத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏனெனில் கொரோனா தொற்று அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வெவ்வேறு திரிபுகளில் பரவி வருவது மருத்துவ துறைக்கே பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியாவில் பரவியுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

vaccine corona

இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கூறுகையில், ஒமைக்ரான் வைரஸ் உருவாக்கியுள்ள நோய் எதிர்ப்பு சக்தி புதிய மாறுபாடு ஏற்படுத்தப்போகும் பாதிப்பை தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது. பி.ஏ.2. மாறுபாடு ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் 39 சதவீதம் அதிகம் நோய் பரப்பும் தன்மையை கொண்டிருப்பர். தடுப்பூசி செலுத்தியவர்களை விட தடுப்பூசி செலுத்தாதவர்களை தான் இந்த புதிய மாறுபாடு அதிகம் பாதிக்கும் என எச்சரித்துள்ளனர்.

மேலும், பூஸ்டர் தடுப்பூசிகளை நாம் தொடர்ந்து செலுத்துவது மட்டுமே பயன் தரும். இருப்பினும் தற்போது கிடைத்துள்ள தரவுகளை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிட முடியாது, தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர்.

vaccine corona

இந்த ஒமைக்ரான் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it