தமிழக மக்களுக்கு எச்சரிக்கை – உடனே இதை ஷேர் செய்யுங்க!!
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை – உடனே இதை ஷேர் செய்யுங்க!!

கடந்த மாதம் மின் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை என்று அனுப்பப்படும் போலி தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஷிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாத பில் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை என்றும் குறுஞ்செய்தி வரும்.
உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுஞ்செய்தி ஆக அனுப்புவர். இதனை நம்பி தொடர்பு கொள்ளும் பொதுமக்களிடம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று பணத்தை கொள்ளையடிப்பர்.

எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த மொபைல் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே போல், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ள நபர்கள் ஆகியோரின் படங்களை வாட்ஸ்அப் டிஸ்பிளே படங்களாக பயன்படுத்தி சக அதிகாரிகள் மற்றும் பணிபுரியும் அலுவலர்களை தொடர்பு கொண்டு கிஃப்ட், பணம் அனுப்ப கூறுதல் போன்ற குற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் எவரும் தங்களுக்கு தெரிந்த அதிகாரியின் புகைப்படத்துடன் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளையோ, இ-மெயில்களையோ அல்லது பேஸ்புக் மெசெஞ்சர் குறுஞ்செய்தியையோ நம்பி பணமோ அல்லது கிப்ட் கார்டுகளோ அனுப்ப வேண்டாம்.
newstm.in

