Theme Check

புதுவையில் நுழைந்து விட்டோம்.. தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம்: அண்ணாமலை நம்பிக்கை..!

புதுவையில் நுழைந்து விட்டோம்.. தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம்: அண்ணாமலை நம்பிக்கை..!

புதுவையில் நுழைந்து விட்டோம்.. தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம்: அண்ணாமலை நம்பிக்கை..!
X

“புதுச்சேரியில் நுழைந்து விட்டோம். எனவே, தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும்” என்று, அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “அடுத்த தேர்தலில், ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதனால்தான் நாடாளுமன்றத்தில் அவர் தமிழகம் பற்றி பேசியுள்ளார். ராகுல் தமிழகம் குறித்தும், பாஜக குறித்து பேசியதை வரவேற்கிறோம்.

ராகுல் ஜாதகப்படி, அவர் சொன்னதெற்கெல்லாம் எதிராக நடக்கும். நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் இறுதியாக பேசும்போது ராகுல் பேச்சுக்கு பதில் கொடுத்துவிடுவார்.

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். அவரை மதித்து யாராவது ஒருவர் பதில் அளித்தாரா..? புதுச்சேரியில் நுழைந்து விட்டோம், எனவே, தமிழகத்தில் கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்கும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வேண்டும் என்று முதன் முதலில் சொன்னது பாஜக தலைவர் ஜே.பி.நட்டாதான்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

Next Story
Share it