Theme Check

“முதல்வர் வீட்டை மீண்டும் முற்றுகையிடுவோம்” : எச்சரிக்கை விடுத்த ஏபிவிபி!!

“முதல்வர் வீட்டை மீண்டும் முற்றுகையிடுவோம்” : எச்சரிக்கை விடுத்த ஏபிவிபி!!

“முதல்வர் வீட்டை மீண்டும் முற்றுகையிடுவோம்” : எச்சரிக்கை விடுத்த ஏபிவிபி!!
X

சென்னையில் கைது செய்யப்பட்ட .பி.வி.பி நிர்வாகிகளை விடுதலை செய்யவில்லையென்றால் மீண்டும் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் அந்த அமைப்பின் நிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.

தஞ்சை பள்ளி மாணவி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு..ஸ்டாலின் இல்லத்தை முற்றுகையிட்டு .பி.வி.பி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைது செய்யப்பட்ட 29 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை பிப்ரவரி 28ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஏபிவிபி நிர்வாகிகள் இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் முதல்வரை சந்தித்து முறையிட இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ABVP

தஞ்சை பள்ளி மாணவி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் எந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் .பி.வி.பி குரல் கொடுக்கும் என தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் எந்த வித அரசியல் உள்நோக்கம் இல்லை என கூறியுள்ளனர்.

சென்னையில் அனுமதிக்கப்பட்ட மற்ற இடங்களில் போராட்டம் நடத்தினால் முதல்வருக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியான விடுதலை செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மீண்டும் முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it