உறவு கொள்ளும் போது மாஸ்க் அணிய வேண்டும்!!
உறவு கொள்ளும் போது மாஸ்க் அணிய வேண்டும்!!

உடலுறவு கொள்ளும் போது மாஸ்க் அணிய வேண்டும் என தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 8000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் தினசரி பாதிப்பு அங்கு இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் காதலர்தின வாரம் என்பதால் அந்நாட்டு மருத்துவ வல்லுநர்கள் இளம் காதல் ஜோடிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர். அதாவது உறவு கொள்ளும் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கூறியுள்ளனர்.

உடலுறவினால் கொரோனா பரவாது என்றாலும் கூட எச்சில் மூலம் பரவும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதே போல் உடலுறவு கொள்வதற்கு முன்பு காதல் ஜோடிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். முடிந்தால் மாஸ்க் அணிந்து கொண்டு உறவு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
newstm.in

