கல்யாண நிகழ்ச்சி உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை!!
கல்யாண நிகழ்ச்சி உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை!!

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் கல்யாண நிகழ்ச்சி உரிமையை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
நேற்று காலை 10:25 என்ற மணி அளவில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது. திரையுலகின் உச்சநட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருமணத்தை திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் இயக்கினார். அதை நெட்பிளிக்ஸ் தளத்தில் விற்பனை செய்ய உள்ளார்கள். அதனால் திருமணத்தை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இதனால் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியில் கசிந்து விடாமல் இருக்க திருமணத்தில் பங்கேற்க வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

திருமணம் நடக்கும் அரங்குக்குள் செல்போன் கொண்டு வரவும் புகைப்படம் எடுக்கவும் தடை விதித்தனர். அழைப்பிதழ் வைத்து இருப்பவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்க வாயிலில் தனியார் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டனர்.
பாலிவுட் நடிகை கத்ரினா கைப் திருமணத்தை தனியார் நிறுவனம் பொறுப்பேற்று நடத்தியது போல் நயன்தாரா திருமண ஏற்பாடுகளையும் தனியார் நிறுவனம் நடத்தியது. கத்ரினா கைப் – விக்கி கவுஷல் திருமண வீடியோ உரிமையை நெட் பிளிக்ஸ் 80 கோடி ரூபாய்க்கு வாங்கியது நினைவுக்கூரத்தக்கது.
newstm.in

