ஏன் அப்பா இப்படி தினமும் குடிக்கிறீங்க என கேட்ட மகள்களுக்கு நேர்ந்த அவலம்..!!
ஏன் அப்பா இப்படி தினமும் குடிக்கிறீங்க என கேட்ட மகள்களுக்கு நேர்ந்த அவலம்..!!

ஒரகடம் அடுத்த சின்ன மதுரப்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தாராஜ்(37). இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருடைய மனைவி தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல் இவரின் 2-வது மகளான நதியா (14) தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் மது போதையில் கோவிந்தராஜ் தனது குடும்பத்தாருடன் தொடர்ச்சியாக சண்டையிட்டு வந்து நிலையில், இன்று இவருடைய மகள்களான நந்தினி(16), தீபா(9)ஆகிய இருவரும் வீட்டில் இருந்து இருக்கிறார்கள். வழக்கம்போல் இன்று பகல் மது வாங்கி குடித்துவிட்டு அதிக போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் இரு மகள்களும் கோவிந்தராஜுவிடம் சண்டை போட்டிருக்கிறார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் குடிபோதையில் அருகில் இருந்த கட்டையால் இரு மகள்களையும் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் கோவிந்தராஜை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒரகடம் போலீசார் கோவிந்தராஜை கைது செய்திருப்பதுடன் உயிரிழந்த இரு மகள்களின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மது போதையில் தனது இரு மகள்களையும் அடித்துக்கொன்ற தந்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

