Theme Check

என்ன சொல்றீங்க எம்பி சார்.. 638 போலீஸ் ஸ்டேஷன்ல போனே இல்லையா..?

என்ன சொல்றீங்க எம்பி சார்.. 638 போலீஸ் ஸ்டேஷன்ல போனே இல்லையா..?

என்ன சொல்றீங்க எம்பி சார்.. 638 போலீஸ் ஸ்டேஷன்ல போனே இல்லையா..?
X

இந்தியா முழுவதும், 638 போலீஸ் ஸ்டேஷன்களில் தொலைபேசி வசதி இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

‘கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் உள்ள 16 ஆயிரத்து 833 போலீஸ் ஸ்டேஷன்களில் 257 போலீஸ் ஸ்டேஷன்களில் வாகனங்களே இல்லை.

638 போலீ்ஸ் ஸ்டேஷன்களில் தொலைபேசி வசதி இல்லை. 143 போலீஸ் ஸ்டேஷன்களில் வயர்லெஸ் அல்லது செல்போன் வசதி இல்லை.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாப்பு பிரச்னை உள்ள அருணாச்சல பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் போன்ற எல்லைப்புற மாநிலங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது.

எனவே, மாநில அரசுகளுடன் பேசி, இந்தப் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it