Theme Check

ஒரு பாட்டில் ஓட்காவை குடித்தவருக்கு நேர்ந்த கதி!!

ஒரு பாட்டில் ஓட்காவை குடித்தவருக்கு நேர்ந்த கதி!!

ஒரு பாட்டில் ஓட்காவை குடித்தவருக்கு நேர்ந்த கதி!!
X

ஒரு ஃபுல் ஓட்காவை குடித்த மாணவர் ஒருவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமெரிக்காவில் டேனியல் சாண்டுல்லி (19) என்ற மாணவர் மிசோரி பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கிப் படிக்க சென்றார். அப்போது விடுதியில் இருந்த மாணவர்கள், ஒரு ஃபுல் ஓட்காவை முழுவதுமாக குடிக்க முடியுமா என்று சவால் விடுத்தனர்.

இதனால் ஒரு பாட்டில் முழுவதையும் குடித்த டேனியல் போதை மூளைக்கு ஏறி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து டேனியலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் 0.486% இருந்துள்ளது.

vodka

இது வரம்பை விட ஆறு மடங்கு அதிகம். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் டேனியல், புத்துயிர் பெற்று வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு குறிப்பிடத்தக்க மூளை பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it