சாலையில் பெண்களிடம் செல்போன் எண் கேட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கதி !!
சாலையில் பெண்களிடம் செல்போன் எண் கேட்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கதி !!

இரு பெண்களை துரத்திச் சென்று அவர்களின் செல்போன் எண்ணை கேட்ட இளைஞர்களுக்கு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதியன்று அந்தேரி பகுதியைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் சாலையில் நடந்து சென்றனர். அப்போது அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் இரு பெண்களையும் பின் தொடர்ந்துள்ளனர். சிறிது தூரம் நடந்த பின்னர் இந்த பெண்களுக்கு தங்களை இருவர் பின்தொடர்வது தெரியவந்துள்ளது.
சிறிது நேரம் நின்று அவர்களை பார்த்த போது இரு இளைஞர்களும் அந்த இளம் பெண்களிடம் தகாத முறையில் பேசி, இருவரின் செல்போன் எண்ணையும் தர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இவர்களிடம் இருந்து தப்பிக்க இரு பெண்களும் வேகமாக நடந்த நிலையில், இரு இளைஞர்களும் விடாமல் பின் தொடர்ந்துள்ளனர்.

அத்துடன், செல்போன் எண்ணை தரவில்லை என்றால், அடுத்த நாளும் விடாமல் தொடர்வோம் என மிரட்டியுள்ளனர். இரு பெண்களில் ஒருவரின் தம்பி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்துள்ளார். உடனடியாக, வேகமாக நடந்த அங்கு சென்ற பெண்கள் விஷயத்தை தம்பியிடம் விவகாரத்தை கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்திய பெண்ணின் சகோதரர் பொதுமக்களை திரட்டி இருவரையும் கண்டித்துள்ளார். அத்துடன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புகார் அளித்துள்ளார்.
இரு பெண்களின் ஒருவர் சிறுமி என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பெண்களுக்கு தொல்லை கொடுத்து சீண்டலில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளது. எனவே குற்றவாளிகளான இரு இளைஞர்களுக்கும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் வதிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளார்.
newstm.in

