Theme Check

என்னது... வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.3,419 கோடியா? – அதிர்ந்த பெண்!!

என்னது... வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.3,419 கோடியா? – அதிர்ந்த பெண்!!

என்னது... வீட்டுக்கு மின் கட்டணம் ரூ.3,419 கோடியா? – அதிர்ந்த பெண்!!
X

பெண் ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் செலுத்த கோரி பில் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் சிவ் விஹார் காலனியில் வசித்து வரும் பிரியங்கா குப்தா என்பருக்கு ரூ.3,419 கோடிக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என பில் வந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வளவு பெரிய பில் தொகையை பார்த்து தனது மாமனார் உடல்நலம் குன்றி போய் விட்டதாக அப்பெண் கூறியுள்ளார். அதன்பின்னர், இந்த பில் மாநில மின் நிறுவனம் வழியே சரி செய்யப்பட்டு விட்டது.

eb

மனித தவாறல் இது ஏற்பட்டுள்ளது என்றும், தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. யூனிட்டுகளுக்கு பதிலாக நுகர்வோரின் எண் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஊழியரின் பணியால், இவ்வளவு கூடுதல் தொகை பில்லில் வந்துள்ளது. இதன்பின்னர், ரூ.1,300 என்ற சரியான தொகையுடன் கூடிய பில் மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு விட்டது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

newstm.in


Next Story
Share it