Theme Check

பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கையில் திமுகவினர் தலையிட்டால்? - அமைச்சர் எச்சரிக்கை !!

பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கையில் திமுகவினர் தலையிட்டால்? - அமைச்சர் எச்சரிக்கை !!

பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கையில் திமுகவினர் தலையிட்டால்? - அமைச்சர் எச்சரிக்கை !!
X

பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலான பரப்புரை தொடக்கவிழா நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில், மேலாண்மைக் குழுவை மேம்படுத்தும் வகையில், நம் பள்ளி - நம் பெருமை என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாநில திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சுதன், கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மைக் குழுக்களின் அவசியம் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் இந்த புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

அரசுப் பள்ளிகளின் பெற்றோர் - ஆசிரியர் கழகங்களில் திமுகவினர் தலையீடு இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டுமே மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும். அடுத்து வரும் ஆண்டுகளில் இருந்து, வழக்கம் போல ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எனவே, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை அதிகப்படுத்துவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார்.

newstm.in

Next Story
Share it