நாகர்ஜூனாவுடன் என்ன உறவு? - சமந்தா விவாகரத்துக்கு பின் அஜித் பட நடிகை விளக்கம்

நாகர்ஜூனாவுடன் என்ன உறவு? - சமந்தா விவாகரத்துக்கு பின் அஜித் பட நடிகை விளக்கம்

நாகர்ஜூனாவுடன் என்ன உறவு? - சமந்தா விவாகரத்துக்கு பின் அஜித் பட நடிகை விளக்கம்
X

நாகர்ஜூனாவுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் நடிகை தபு. படங்களில் அவர்களுக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை வைத்து நாகர்ஜுனா, தபு இடையே காதல் என்று பரவலாக பேசப்பட்டது. இது தொடர்பாக இருவரும் வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.

thabu nagarujuna

இந்நிலையில் கரண் ஜோஹார் நிகழ்ச்சியில் தபுவிடம் அது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தபு கூறியதாவது, நாகர்ஜுனா கதை ரொம்ப பழசு. ஆனாலும் அது அடிக்கடி திரும்பி வருகிறது. எனக்கு காதலர் இருக்கிறாரா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறது மீடியா. காதலர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் நாகர்ஜுனா மட்டும் அப்படியே இருப்பார்.

எனக்கு நெருக்கமானவர்களில் நாகர்ஜுனாவும் ஒருவர். என் வாழ்க்கையில் இருக்கும் முக்கியமான உறவுகளில் அவரும் ஒருவர். அது எனக்கு நெருக்கமான உறவும் கூட. அவருடனான என் உறவை எதனாலும் மாற்ற முடியாது. இருப்பினும் அந்த உறவுக்கு என்னிடம் பெயர் இல்லை என்றார்.

thabu nagarujuna

நாகர்ஜுனாவுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். நாக சைதன்யாவுக்கு நடிகை சமந்தாவுடன் திருமணம் நடந்து தற்போது பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நாகர்ஜுனாவையும் தபுவையும் சேர்த்து வைத்து அவ்வப்போது பேச்சு கிளம்புவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:
Next Story
Share it