Theme Check

காங்கிரஸ் பிரமுகர் செய்த காரியம்.. போக்சோவில் அள்ளியது போலீஸ்..!

காங்கிரஸ் பிரமுகர் செய்த காரியம்.. போக்சோவில் அள்ளியது போலீஸ்..!

காங்கிரஸ் பிரமுகர் செய்த காரியம்.. போக்சோவில் அள்ளியது போலீஸ்..!
X

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் அஜீப் (36). இவர், காங்கிரஸ் இளைஞர் அணி பிரிவின் தலைவராக உள்ளார். இந்நிலையில், அஜீப் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அஜீப்பின் நண்பர் அதிகமாக மது அருந்தியதால், மயங்கி விழுந்தார்.


இதனால், தனது நண்பரை வீட்டுக்கு கொண்டுபோய் சேர்ப்பதற்காக அஜீப் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். மயக்கத்தில் இருந்த தனது நண்பரை ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு அஜீப் வெளியே வந்துள்ளார்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை அஜீப் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

அதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து கண்ணூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அஜீப் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
Share it