Theme Check

இளைஞர்கள் செய்த காரியம்.. 2 பசுக்கள் பலி.. ஒருவர் கைது..!

இளைஞர்கள் செய்த காரியம்.. 2 பசுக்கள் பலி.. ஒருவர் கைது..!

இளைஞர்கள் செய்த காரியம்.. 2 பசுக்கள் பலி.. ஒருவர் கைது..!
X

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (49). இவர், தனது தோட்டத்தில் 4 பசு மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஊருக்குள் இருந்து எடுத்து வரப்பட்ட கழனி தண்ணீரை தனது மாடுகளுக்கு கொடுத்துள்ளார். அதை குடித்த சிறிது நேரத்திலேயே 2 பசுக்கள் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தன.

இதுகுறித்து கலைச்செல்வி, வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இறந்த பசுக்களை பிரேதப் பரிசோதனை செய்தபோது, அவை இரண்டும் விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சபரி கார்த்திக் (19) மற்றும் அவரது உறவினர் தங்கதுரை (25) ஆகிய இருவரும் முன்பகை காரணமாக கலைச்செல்வியின் பசு குடிக்கும் கழனி தண்ணீரில் விஷத்தை கலந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து சபரி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தங்கதுரையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story
Share it