பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது ? எப்படி மீண்டும் வாங்குவது ?
பான் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது ? எப்படி மீண்டும் வாங்குவது ?

சராசரியாக ஆண்டொன்றுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பான் கார்டு அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் செலுத்தவோ எடுக்கவோ பான் கார்டு எண் கொடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வாகனம், நிலம், வீடு போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்கும்போதும் பான் கார்டு எண் அவசியமாகிறது. தவிர, அரசு வேறு எதற்கெல்லாம் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வலியுறுத்துகிறதோ அற்கெல்லாம் கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஒருவர் பான் கார்டு வாங்கியதாலேயே அவர் வருமான வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வருமானம் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் மேலும் சில நன்மைகள் உண்டு. அதை கொண்டு அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் தேவைக்கேற்ப அடையாள அட்டையாகப் பயன்படுத்தி உங்கள் வேலையை எளிதாக்கலாம்.
பான் கார்டு தொலைந்து விட்டால், மீண்டும் எப்படி பெறுவது? எங்கு செல்ல வேண்டும்? யாரிடம் பெற வேண்டும்? என்ற குழப்பம் உள்ளது. பான் கார்டு தொலைத்தவர்கள் அல்லது கூடுதலாக பான் கார்டு பத்திரப்படுத்த நினைப்பவர்கள், என்.எஸ்.டி.எல் இணையதளத்தில் இருந்து ரீபிரிண்ட் பான் கார்டை அப்ளை செய்து பெற்றுக் கொள்ளமுடியும்.
பான் கார்டை தொலைந்து விட்டால், மின்னணு பான் கார்டு அல்லது இ-பான் (e-PAN) அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இந்த பான் கார்டு பிடிஎப்-ஐ திறக்க உங்களின் பிறந்த நாளை தேதி, மாதம், வருடம் (ddmmyyyy) என்ற வகையில் உள்ளிட வேண்டும். இல்லை கையில் தான் பான் கார்டு வேண்டும் என்றால், ரீபிரிண்ட் பான் கார்டை நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) வழங்குகிறது.
சில எளிய வழிமுறைகளை பின்பற்றி என்.எஸ்.டி.எல் தளத்தில் பான் கார்டு ரீபிரிண்ட் வெர்ஷனை நீங்கள் அஞ்சல் மூலம் பெற முடியும்.
ரீபிரிண்ட் பான் கார்டு பெறுவது எப்படி?
* முதலில் கீழேயுள்ள NSDL லிங்கை கிளிக் செய்து
https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html இணைப்பிற்குள் செல்லவும்.
* அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
* இதில் இ-பான் (e-PAN) அட்டையை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
* ரீபிரிண்ட் பான் அட்டைக்கு ரூ 50 செலுத்தி பெறலாம்.
* படிவத்தை பூர்த்தி செய்த பிறகு captcha வை பூர்த்தி செய்து submit -டை கிளிக் செய்யவும்.
* பின்பு உங்களின் Pan கார்டின் விபரங்களை காட்டும்.
* OTP வரும் சேவையை பயன்படுத்தி OTP வந்த பிறகு Next கொடுத்து payment ஆப்சன் தோன்றும் பணம் செலுத்திய பிறகு ரீபிரிண்ட் அட்டையை பெறமுடியும், நிரந்தர முகவரிக்கு அஞ்சல் மூலமாக உங்களுக்கு பான் கார்டு அனுப்பப்படும்.