Theme Check

வாட்ஸ்ஆப் வதந்தி.. அரசியல் ஆலோசகர் நடுரோட்டில் உயிருடன் எரித்து கொலை !

வாட்ஸ்ஆப் வதந்தி.. அரசியல் ஆலோசகர் நடுரோட்டில் உயிருடன் எரித்து கொலை !

வாட்ஸ்ஆப் வதந்தி.. அரசியல் ஆலோசகர் நடுரோட்டில் உயிருடன் எரித்து கொலை !
X

உலகம் முழுவதும் ட்விட்டர், வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெரியளவில் உயர்ந்துவிட்டது. இதில் சில நன்மைகள் இருந்தாலும் பெரியளவில் ஆபத்தும் உள்ளது என்பதை அவ்வாறு நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக போலியான செய்திகள் மற்றும் வதந்தியான தகவல்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதைப் பலர் உண்மையை நம்பியதால் பல விபரீதமான நிகழ்வுகளும் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. ஏன் பெரும் வன்முறை, கலவரம் கூட ஏற்படுகிறது என்றால் எவ்வளவு ஆபத்து என்பதை உணர முடிகிறது. இதனால், வதந்திகளை தடுப்பதற்காக சமூக வலைதள நிறுவனங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போது போலியான வதந்தி செய்தியால் அதிகாரி ஒருவர் மெக்சிகோவில் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டில் அரசியல் ஆலோசகராக இருந்தவர் டேனியல் பிகாசோ (31). இவர் குழந்தை கடத்தல் காரர் என ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் புகைப்படத்துடன் போலியாகச் செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது.

fdg

பின்னர் இந்த செய்தி பல குழுக்களுக்கு பரவியுள்ளது. இதனை பார்த்த பலர் உண்மை என நம்பியுள்ளனர். இதனால் டேனியில் பிகாசோவை நடுரோட்டில் வைத்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதையடுத்து போலீசார் கண்முன்னே டேனியல் பிகாசோவை அக்கும்பல் நடுரோட்டிலேய உயிருடன் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Next Story
Share it