Theme Check

கலை கல்லூரிகளில் சேர எப்போது விண்ணப்பிக்கலாம்? – விவரம் வெளியீடு!!

கலை கல்லூரிகளில் சேர எப்போது விண்ணப்பிக்கலாம்? – விவரம் வெளியீடு!!

கலை கல்லூரிகளில் சேர எப்போது விண்ணப்பிக்கலாம்? – விவரம் வெளியீடு!!
X

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 27ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் 22ஆம் தேதியில் இருந்து விண்ணப்ப பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tngasa.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76.

Students

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வரும் 22ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2022 (TNEA 2022) விண்ணப்ப செயல்முறை இன்று முதல் தொடங்கியது.

பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். https://www.tneaonline.org/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.

newstm.in

Next Story
Share it