என்னது? ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிஞ்சுடுச்சா? காதலரே கூறிய உண்மை !!

என்னது? ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிஞ்சுடுச்சா? காதலரே கூறிய உண்மை !!

என்னது? ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் முடிஞ்சுடுச்சா? காதலரே கூறிய உண்மை !!
X

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் தற்போது மும்பையில் தற்போது வசித்து வருகிறார். இவர் தனது நண்பரும் காதலருமான சாந்தனு ஹஸாரிகா உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

முன்னதாக, லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக நடிகரை காதலித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இதையடுத்து, தான் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக ஸ்ருதி தெரிவித்திருந்தார்.

shuruthihassan

சாந்தனு, டெல்லியை சேர்ந்த ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர். இந்நிலையில், சமீபத்தில் சாந்தனு அளித்த பேட்டி ஒன்றில், ஸ்ருதிஹாசனுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் சாந்தனுவிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சாந்தனு, நாங்கள் ஏற்கனவே கிரியேட்டிவாக திருமணம் ஆனவர்கள். எங்களுடைய பந்தம் மிகவும் உறுதியானது. அதற்கு சாட்சியாக நாங்கள் எங்கள் தொழிலில் செய்யும் புதுமையான விஷயங்கள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, நாங்கள் இருவரும் இணைந்து புதுமையான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

shuruthihassan

எப்போதும், புதுமையாக யோசித்து இருப்பது தான் எங்கள் இருவருக்கும் ரொம்பவும் முக்கியம். இருப்பினும் திருமணம் பற்றி பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆகவே, இனி வரும் நாட்களில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it