10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? இன்று முக்கிய அறிவிப்பு!!
10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? இன்று முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை வெளியாக உள்ளது.
கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

தொற்று குறைந்துள்ளதால் நேரடியாக தேர்வு நடத்தப்படவே வாய்ப்பு அதிகம். எனவே, மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்கும் முனைப்பில் ஆசிரியர்கள் வகுப்புகளை வேகமாக நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட உள்ளார்.
newstm.in

