Theme Check

பள்ளி திறப்பு எப்போது ? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!!

பள்ளி திறப்பு எப்போது ? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!!

பள்ளி திறப்பு எப்போது ? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!!
X

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி, காட்டூர் ஜூப்ளி மகாலில், இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் உட்பட 277 பயனாளிகளுக்கு 1,78,16,685 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் ஒன்றிய அரசு நம்மை கடைசி நேரத்தில்தான் அழைக்கிறது. தமிழ்நாட்டில் கல்வித்துறை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை முதல்வர் அறிவுறுத்தலின் பெயரில் நடத்தி வருகிறோம். நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும் கூட்டத்திற்கு தான் முக்கியத்துவம் தருவோம். அதுதான் நம் மாநிலத்திற்கு நல்லது.

Anbil

பள்ளி திறப்பில் எந்த மாற்றமுமில்லை. திட்டமிட்டபடி ஜூன் 13-ம் தேதி கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா அதிகரித்துவரும் நிலையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அல்லது விதிகள் பின்பற்ற வேண்டுமோ அதை மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை அடிப்படையில், முதல்வர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் அதை பின்பற்றுவோம். நீட் தேர்வை நடத்துவது பாஜக அரசு தான். ஆனால் அண்ணாமலை உச்சநீதிமன்றத்திற்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்று நம்மிடமே கூறுகிறார்” என்று கூறினார்.

Next Story
Share it